மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

பழங்குடியின மக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு ரூ.6 லட்சம் செலவில் வீடுகள் கட்டித்தர வேண்டும். என்.புதுப்பட்டியில் உண்டு உறை விடப்பள்ளி கட்டித்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது.

இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெருமாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் செல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர். சாதிச் சான்றிதழை 54 பேருக்கு டிச.5-ம் தேதிக்குள் வழங்கு வதாக கோட்டாட்சியர் உறுதி யளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்