புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க ஓலைகள் வெட்டி அகற்றலாம் கிருஷ்ணகிரி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க அதிக எடையுடன் காணப்படும் ஓலை களை வெட்டி அகற்ற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிதீவிரமான வேகத் துடன் வீசும் புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாப்பதற்கு வேளாண்மைத்துறை வழங்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளது. அதன்படி, நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில், முதிர்ச்சி அடைந்த அல்லது முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள இளநீர்க் காய்களை பலத்த காற்று வீசத் தொடங்குவதற்குள் அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களில் தலைப் பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

உடனடியாக, தென்னை மரங்களுக்கு நீர்பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதனால், தென்னை மரங்களில் வேர்ப்பகுதி நன்கு இறுகி, பாதிக்கப்படாமல், காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும். இதனையும் மீறி தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், விவசாயிகள் தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்