கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி நடந்தது.

கிருஷ்ணகிரி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது.

இப்பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலாவதி, பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோதண்டபாணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பழையபேட்டை முர்த்துஜாதெரு, மக்கான் தெரு, மில்லத்நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொண் டனர்.இதில், செங்கல் சூளைகள், கட்டுமானப் பணி இடங்கள், குவாரிகள், தொழிற்சாலைகள் பணிபுரிய வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் புலம் பெயர்ந்து வரும் குழந்தைகள் குறித்து கணக் கெடுக்கும் பணிகள் நடந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்