பாஜகவின் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம் செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தது. உயர் நீதிமன்றமும் அனுமதி அளிக்க மறுத்தது. இந்நிலையில், அக்கட்சியினர் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதை அரசும், காவல் துறையும் வேடிக்கை பார்ப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்து, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அரசின் தடையை மீறி நடைபெற்றுவரும் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி நோக்கி பெரியார் கைத்தடி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை, மாநகர காவல் துறையினர் தடுத்து நிறுத்தி 100 பேரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago