திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 வயது சிறுமி உட்பட இருவர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வரும் நிலையில், தற்போது திருப்பூர்,கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால், ஆங்காங்கே தேங்கும் மழைநீரில் கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு தொடங்கியுள்ளது.
திருப்பூர் செரங்காட்டை சேர்ந்த 6 வயது பெண் குழந்தை, பெருமாநல்லூர் சாலை எம்.எஸ். நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறும்போது, "டெங்கு காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர தீவிர காய்ச்சல் பிரிவு வார்டும், கரோனா வார்டும் தனித்தனியாக உள்ளன. டெங்கு பாதிப்பு பெரிதாகஇல்லை. தற்போது இருவருக்கு மட்டும் சிகிச்சை அளித்து வருகிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago