அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட பாண்டியன் நகர் சவுண்டம்மன் கோயில் வீதியைச்சேர்ந்த பொதுமக்கள், பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்துவருகிறோம்.எங்கள் பகுதியில் சாக்கடை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பல கோடி செலவில் பல்வேறு திட்டங்களை மாநகராட்சிஅமல்படுத்துகிறது. ஆனால், நாங்கள் எதிர்பார்ப்பது அத்தியாவசியமான அடிப்படை தேவை கள்தான். இதனை உடனடியாகசெய்துதர வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். திருமுருகன் பூண்டி போலீஸார் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago