சிதம்பரத்தில் தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குநர் கவுதமன் கூறியது:
அரசு விழாவுக்காக அமித்ஷாதமிழ்நாடுக்கு வரவில்லை, சட்ட மன்ற தேர்தல் சீட்டுக்காகத்தான் வந்தார். அதிமுக பாஜகவுக்கு அடிமையாவதில் எந்தப் பிரச்சி னையும் இல்லை. மக்களை அடிமை ஆக்கக் கூடாது. இதனை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனை நாங்களும் அனுமதிக்க மாட்டோம்.
அரசு பள்ளி இடஒதுக்கீட்டில், மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தான் இடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம், வேல்யாத்திரை நடத்தும் பாஜக மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பெயர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட் டுள்ளது. தமிழ் மொழியில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்கவேண்டும். கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அனைத்து தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழ் பேரரசு கட்சி போராட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.
நீதிமன்றமும் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago