ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ‘காணாமல் போனோரைக் கண்டறியும் சிறப்பு முகாம்’ காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தலைமையில் டிஐஜி என்.எம்.மயில்வாகனன் முன்னிலையில் கழுகூரணியில் நடந்தது.
மாவட்டம் முழுவதும் 159 பேர் காணாமல் போனது தொடர் பாக வழக்குகள் பதிவாகி விசாரணையில் இருந்து வருகிறது. இதில் 122 புகார்தாரர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்றனர்.அவர்களிடம் காணாமல் போனோர் பற்றி தற்போதைய தகவல்களைக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 26 வழக்குகளில் காணாமல் போனோரின் விவரம் கேட்டறிந்து மேல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
மேலும், 96 வழக்குகளில் காணாமல் போனோரின் தற்போதைய விவரங்கள் கேட்ட றிந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் தொழில்நுட்ப உதவியுடன் இவ்வழக்குகளில் காணாமல் போனோரை விரைந்து கண்டறிய அறிவுறுத்தப்பட்டது. இச்சிறப்பு முகாம் மூலம் திரட்டப்பட்ட தகவலின் அடிப்படை யில் சிறப்பு தனிப்படை அமைக் கப்பட்டு காணாமல் போனோரைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய காவல் உட்கோட் டங்களில் 116 பேர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் சிறப்பு விசாரணை முகாம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.பெரு மாள் முன்னிலை வகித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago