ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து, கனமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடைபெற்றது

இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை (நவ. 24) முதல் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளான 39 இடங்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 32 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள், பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை 1077 மற்றும் 04567-230060 ஆகிய எண்களில் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலாக்க பிரிவைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்