மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள்கூறும்போது, "தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் காற்று, ஒலி மாசை கண்காணிக்க மாநகரின் மையப் பகுதியான குமரன் வணிக வளாகத்தின் மேல்பகுதி, ராயபுரம் ஆகிய இரண்டுஇடங்களில் கடந்த 7-ம் தேதி கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி, குமரன் வணிக வளாகத்தில் சாதாரண நாளில் 11 மைக்ரோ கிராம் ஆகஇருந்த கந்தக டை ஆக்சைடு, தீபாவளியன்று 15.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பண்டிகைக்கு முன் 9 ஆக இருந்த நைட்ரஜன் டை ஆக்சைடு, தீபாவளியன்று 14.81-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல, ராயபுரத்தில் தீபாவளிக்கு முன்பு 16.6 மைக்ரோ கிராமாக இருந்த கந்தக டை ஆக்சைடு, தீபாவளியன்று 25 மைக்ரோ கிராமாக அதிகரித்துள்ளது. நைட்ரஜன் டை ஆக்சைடுஅளவும் அதிகரித்து 25.8 சதவீதமாக இருந்தது. மேலும், இரண்டுபகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட ஒலி மாசு அளவு 55 டெசிபெல். தீபாவளியன்று ராயபுரத்தில் 68.4, குமரன் வணிக வளாகத்தில் 60.35 டெசிபெல்லாக அதிகரித்துகாணப்பட்டது.
அதேசமயம், தீபாவளி நாளில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள் அளவு 130 மைக்ரோ கிராமாகவும், 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள் அளவு 66 மைக்ரோ கிராமாகவும் சீராக இருந்தது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago