அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விச் செலவு ஸ்டாலினுக்கு பின் முதல்வர் அறிவித்தது ஏன்? தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கேள்வி

By செய்திப்பிரிவு

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்ட பிறகு, அந்த கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அவசர அவசரமாக தெரிவித்தது ஏன் என்று முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் தங்கம் தென்னரசு எம்எல்ஏ அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விச் செலவை திமுக ஏற்கும் என கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை புறவாசல்வழியாக அனுமதித்த தமிழகஅரசு, பின்னர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர அதிககட்டணம் செலுத்த வேண்டிஇருந்தது. அவர்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டே திமுக தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் 86 மாணவர்கள் பயனடைவர்.

இந்நிலையில், தற்போது முதல்வரும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் அறிவித்தபிறகு ஏன் இந்த அறிவிப்பை முதல்வர் அவசர அவசரமாக வெளியிடுகிறார்? முன்பே அறிவிப்பு வெளியிடாமல் யார் அவரைத் தடுத்தது? நேரடியாக, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என ஏன் அறிவிக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்