நாமக்கல்லில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு செய்திதாள்கள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குநருமான எஸ்.சிவசண்முகராஜா தலைமை வகித்துப் பேசியதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணியாகும். தங்கள் பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒருவர்கூட விடுபடாமல் சேர்க்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதனை சரிசெய்யும் பணிகளில் அரசுத்துறை அலுவலர் களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன, என்றார்.

தொடர்ந்து நாமக்கல் வடக்கு, தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாமை பார்வையாளர் சிவசண்முகராஜா பார்வையிட்டார். அப்போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வந்த 18 வயது பூர்த்தியடைந்தோரிடம் விசாரணை நடத்தினார்.

கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக்குமார், ப.மணிராஜ், வட்டாட்சியர் (தேர்தல்) பா. சுப்பிர மணியம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்