திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர், முதல்வர் பழனிசாமியின் உருவபொம் மையை எரித்தனர்.
இதுதொடர்பாக மாநகர திமுக துணை செயலாளர் ஆர்.கே.நீலகண்டன், 19-வது வட்ட செயலாளர் எம்.ராமச் சந்திரன் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். மாநகர இளைஞர் அணி செயலாளர் வைரமுத்து உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், 2-ம் நாளாக நேற்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் கரந்தை தற்காலிக பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில்...
காரைக்கால் அரசலாற்று பாலம் அருகே மாவட்ட திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச் நாஜிம் தலைமையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநில தெற்கு அமைப்பாளர் ஆர்.சிவா எம்எல்ஏ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர், திருமாந்துறையில் மறியலில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago