ஆரணியில் சிலிண்டர் வெடித்து தான் 5 பேர் உயிரிழந்தார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 15-ம் தேதி காலை காஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தை ஆரணி நாடாளு மன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந் தவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை நிதியுதவி வழங்கவில்லை. எனவே, முதல்வர் துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த நேரத்தில் நிவாரண நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும், நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும். உயிரிழப்பு களுடன் வீடுகளும் தரைமட்டமாக உள்ளது. இடிந்து விழுந்த வீடு களை, தமிழக அரசு கட்டிக் கொடுக்க வேண்டும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்து எவ்வாறு நடை பெற்றது என மக்கள் மனதில் குழப்பமாக உள்ளது. சிலிண்டர் வெடித்து சிதறி இருந்தால், வெடித்து சிதறிய சிலிண்டரின் பாகங்கள் கிடைக்க வேண்டும். அப்படி, பாகங்கள் கிடைத்ததாக தகவல்கள் இல்லை. வீடுகள் இடிந்த இடத்தில் இருந்து நல்ல முறையில் 4 சிலிண்டர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சிலிண்டர் வெடிக்கவில்லை என காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி யிருந்தால், விபத்து எப்படி நடைபெற்றது என ஆரணி மக்கள் கேட்கின்றனர்.
இந்த வழக்கில் தீவிர விசா ரணை மேற்கொண்டு, உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன?என மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், இந்த விபத்தா னது சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட் டது என்பது உண்மையானால், தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago