வேளாண் திருத்த சட்டங்களை கைவிட வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்த சட்டங்களை கைவிட வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்பிஎஃப் நிர்வாகி சிதம்பரசாமி தலைமை வகித்தார்.

தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, பெரு நிறுவனங்களின் வரம்பற்ற சுரண்டலுக்கு வழிவகுக்கும் தொழிலாளர் சட்ட நான்கு தொகுப்புகளையும், விவசாயிகளை பெரு நிறுவனங்களின் அடிமைகளாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.முன்னதாக, வரும் 26-ம் தேதி நடைபெற இருக்கும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி, சிஐடியுமாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ்,ஏஐடியுசி மாவட்ட செயலாளர்என்.சேகர், ஐஎன்டியுசி துணைத் தலைவர் வி.ஆர்.ஈஸ்வரன், ஹெச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எஃப் நிர்வாகி மு.சம்பத் ஆகியோர் பேசினர். மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்