உதகை நகரில் விளைநிலத்தில் காட்டெருமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 55 சதவீத வனப்பகுதியில் யானை,காட்டெருமை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கிராமப்பகுதிகளில் உலா வருகின்றன.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரு யானைகள் மின்சாரம்பாய்ந்து உயிரிழந்த நிலையில், மிஷனரி ஹில் பகுதியில் தனியார் தோட்டத்தில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை உயிரிழந்து கிடந்தது. மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago