பணி செய்யவிடாமல் தடுத்து ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்? 2 வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவராஜகண்டிகை ஊராட்சியின் தலைவர் ரவி, நேற்று முன்தினம் திருவள்ளூர் எஸ்.பி-யிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

தேர்தலில் போட்டியிட்டு முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட, பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்து, பணிகளைச் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர் 1-வது வார்டு உறுப்பினர் நீலா,அவரது கணவர் செல்வம், 7-வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர்.

நீலா, செல்வம், ராமகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகியோர், அரசின் திட்டப் பணிகள் எதையும் செய்யவிடாமலும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவிடாமலும் தடுத்து வருகின்றனர். மீறி செயல்பட்டால், நீலாவின் கணவர் செல்வம், ராமகிருஷ்ணன் ஆகியோர் இழிவாகப் பேசுவதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து, விசாரணைநடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி அரவிந்தன் உறுதி அளித்ததாக ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்