தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந் தாண்டு முதல் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசு ஆணையிட்டது. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
அரசுப்பள்ளி மாணவ, மாணவி களான மேல்மலையனூர் கலை தேவி, விழுப்புரம் காயத்ரி, கலை வாணி, பாதிராப்புலியூர் அன்பரசு, கண்டாச்சிபுரம் துரைமுருகன் ஆகியோர் மருத்துவப்படிப்புக்கும், விழுப்புரம் நஸ்ரின் பேகம், ஹேமலட்சுமி, பாதிராப்புலியூர் முருகன் ஆகியோர் பல் மருத்துவப் படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தகலைதேவி சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் இரண்டா மாண்டு பி எஸ் சி நர்ஸிங் படித்துவந்தார். தற்போது அவர் மருத்துவக்கல்விக்கு தேர்ச்சி பெற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூ ரியில் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக்கல் விக்கு தேர்வான கலைதேவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை தமிழ்வழியில் மானந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் படித் தேன். 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 1,096 மதிப்பெண் பெற்றேன். நீட் தேர்வு எழுதினேன். அதில் 356மதிப்பெண் பெற்றேன். அப்போது மருத்துவக்கல்விக்கு இடம் கிடைக்காததால் சென்னை அரசு மருத் துவக்கல்லூரியில் நர்ஸிங் கிடைத் ததால் அதில் சேர்ந்தேன். நீட் தேர்வு எழுத கோச்சிங் சென்டர் எதிலும் சேரவில்லை. கல்லூரி விடுதியில் இருந்தபடி நீட் தேர்வுக்கும் படித்து வந்தேன். இந்தாண்டு நீட் தேர்வு எழுதி 431 மதிப்பெண் பெற்றேன். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முன்தினம் (நேற்று) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என் தந்தை முருகன் விவ சாயி. அம்மா தனலட்சுமி குடும்பதலைவி. என் தங்கை கலைவாணி பிளஸ் 2 முடித்து, தற்போது காவலர் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
எனது சகோதரர் திருப்பதி இந்தாண்டு பிளஸ் 2 முடித் துள்ளார்"என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago