மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில், வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் ராமநாதபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தொழிலாளர், விவசாய நலனுக்கு எதிரான கொள்கைகளைச் செயல்படுத்துவது, தனியார் மயம் ஆகியவற்றைக் கண்டித்து மத்தியத் தொழிற்சங்கங்கள் வரும் 26-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்து, ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ சங்க ஒருங்கிணைப்பாளர் எம். குமார் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலர் எம்.சிவாஜி வேலைநிறுத்தம் குறித்துப் பேசினார். சிஐடியூ மாவட்டத் தலைவர் எம். அய்யாவு, தொமுச மாவட்டத் தலைவர் காஞ்சி, ஏஐடியூசி கட்டுமானத் தொழிற்சங்க நிர்வாகி லோகநாதன், எச்எம்எஸ் தொழிற்சங்க நிர்வாகி குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி காந்திசிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்ட நிர்வாகி என்.கே. ராஜன் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் வின்சென்ட் அமலதாஸ், ஹெச்எம்எஸ் சங்க மாவட்டப் பொறுப்பாளர் ஹாரிஸ், இந்திய கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் என்.எஸ்.பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago