கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 ஆம்புன்ஸ் வாகனங்கள் 25 இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்பட்டன. அந்த ஆம்புலன்ஸ்களை ஆட் சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 2 அவசர ஊர்திகள் ஒரப்பம் மற்றும் சாமல்பட்டி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேம்படுத்தப்பட்ட அவசர ஊர்தி ஒதுக்கப்பட்டுள்ளது. விபத்து, தீக்காயம், அடிதடி, கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்,’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், என்எச்எம் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சண்முகவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டைடஸ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago