தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக் கம் மகன் முருகானந்தம்(38). ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர். அதே ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகன் குணசேகரன்(35). இருவரும் திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago