தி.மலை மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் 01-01-2021-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிறைவு பெற்றவர்கள் (01-01-2003-ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள்), தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பணி டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை பயன்படுத்தலாம். பெயர் சேர்க்கும் படிவத்துடன் வண்ண புகைப்படம், வயது சான்று மற்றும் இருப்பிட ஆதாரத்தை இணைக்க வேண்டும்.

இதையொட்டி, நவம்பர் 21(இன்று), 22 மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21-ம் தேதி வெளியிடப்படும்.

சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங் களில் நிலைய அலுவலர்கள் மூலம் மனுக்கள் பெறப்படும். மையங்களுக்கு சென்று உரிய படிவத்தை பெற்று தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்க லாம். அரசு வேலை நாட்களில், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட் சியர் அலுவலகம், நகராட்சி அலுவ லகம், வாக்குச் சாவடி அலுவலர்கள் அல்லது தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். https://www.nvsp.in/ மற்றும் elections.tn.gov.in ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்