சாதியைக் கூறி விரட்டியடிப்பு?பாதிக்கப்பட்டவர்களிடம் மாவட்ட எஸ்.பி. விசாரணை

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி எம்.குமார் (38). இவர் கடந்த 10-ம் தேதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்திருந்த புகாரில், "தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், ஊரின் மையப் பகுதியில் வசிப்பதற்கு சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், அங்கிருந்து வெளியேறவும் வற்புறுத்தி வந்தனர். இதே காரணத்துக்காக, கடந்த 8-ம் தேதிஅதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் உள்ளிட்டோர் என்னையும், குடும்பத்தினரையும் தாக்கியதுடன், வீட்டைசேதப்படுத்தி காலி செய்துவிரட்டிவிட்டனர். இதற்கு போலீஸாரும் உடந்தையாக உள்ளனர்.உண்மைகளை மறைத்து என் மீது போலியாககுற்றச்சாட்டை சுமத்தி, எழுதி வாங்கிவிட்டனர்.எங்களுக்கு உரிய பாதுகாப்புஅளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும்காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்ககாவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியர்அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர்திஷா மித்தல், கூடுதல் கண்காணிப்பாளர்ஜெயச்சந்திரனும் விசாரித்து விவரங்களை கேட்டறிந்தார்.

இதில், குன்னத்தூர் போலீஸாரின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நம்பிக்கையின்மை தெரிவித்ததால், அவிநாசி காவல்துணைக் கண்காணிப்பாளர் எல்.பாஸ்கர் தலைமையில் விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அவிநாசியில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை விசாரணை நடைபெற்றது. மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'இவ்விவகாரத்தில் முழு விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்