அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு 2020-21-ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது. இந்த இட ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளியில் படித்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது.
இந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் அதிமுக சார்பில் நேற்று வழங்கப்பட்டது. அந்த மாணவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அதிமுக மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் தனது சொந்த பணத்தில் இருந்து அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கினார். அரசுப் பள்ளியில் படித்து மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago