காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழைக்கு பிறகு ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் விவரம் (அடைப்புக் குறிக்குள் இருப்பது ஏரியின் மொத்த கொள்ளளவு):
காஞ்சிபுரம் மாவட்டம்
தாமல் ஏரி - 4 அடி (18 அடி), தென்னேரி - 14 அடி (18 அடி), உத்திரமேரூர் ஏரி - 6 அடி (20 அடி), ஸ்ரீபெரும்புதூர் ஏரி - 15.43 அடி (17.90 அடி), பள்ளிப்பாக்கம் ஏரி - 11.80 அடி (13.20 அடி), மணிமங்கலம் - 14 அடி (18.60 அடி).
செங்கல்பட்டு மாவட்டம்
கொளவாய் ஏரி - 12.90 அடி (15 அடி), பாலூர் ஏரி - 4 அடி (15.30 அடி), பி.வி.களத்தூர் ஏரி - 10.60 அடி (15 அடி), கரூர் ஏரி - 14.70 அடி (15.70 அடி), மானாம்பதி ஏரி - 12 அடி (14.10 அடி), கொண்டங்கி ஏரி - 13 அடி (16.11 அடி), சிறுதாவூர் ஏரி - 11.60 அடி (13.60 அடி), தையூர் ஏரி - 13.90 அடி (13.90 அடி), மதுராந்தகம் ஏரி - 16.90 அடி (23 அடி), பள்ளவன்குளம் ஏரி - 7.50 அடி (15.70 அடி).
இந்த ஏரிகளை மட்டும் நம்பி 34 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளன. ஒரு சில ஏரிகளை தவிர்த்து பெரிய ஏரிகள் அனைத்திலும் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது. தாமல் ஏரி, உத்திரமேரூர் ஏரி, பாலூர் ஏரி ஆகிய ஏரிகளில் மட்டும் குறைவான நீர்வரத்து உள்ளது. இந்த பகுதிகளில் மழை குறைவாக பெய்தாலும் பெய்யும் மழைநீரும் ஏரிக்கு வரும் வகையில் நீர்வரத்து கால்வாய்களை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago