மகளிர் காவல் நிலைய வளாகத்தில் சிறார் விளையாட்டு பூங்கா

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையம், தாலுகா காவல்நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் நேற்று விழுப்புரம் ஹோஸ்ட்லயன்ஸ் கிளப் சார்பில் அமைக் கப்பட்ட விளையாட்டுப்பூங்கா மற்றும் மனநலம் பாதித்தோர் மறுவாழ்வு இணைவுத் திட்டத்தை விழுப்புரம் எஸ் பி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் தலை வர் வேல்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி தேவநாதன், டிஎஸ்பி நல்லசிவம், மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எதிர்பாராத சூழ்நிலையில் பெற்றோருடன் குழந்தைகள் அனைத்துமகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகி றது.

அதுபோன்ற சூழலில் அந்தக்குழந்தைகளுக்கு தங்கள் வீட்டில்இருப்பது போன்ற, நல்ல பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களுக்கு வரும் குழந்தைகள் அச்சமின்றித் தங்களின் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் இருப்பது போன்றசூழலை உணரும் வகை யில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்