சிவகங்கை பெண்ணுக்கு ஐ.நா.வில் பணி

By செய்திப்பிரிவு

சிவகங்கை பெண்ணுக்கு ஐ.நா. சபையில் பணி கிடைத்துள்ளது.

சிவகங்கை அருகே செம்பனூரைச் சேர்ந்த சக்கந்தி வடிவாம்பிகை பஞ்சாலை உரிமையாளர் சுப்பிரமணியம் செட்டியார். இவரது மனைவி முத்து. இவர்களது மகள் ராமலட்சுமி(26). இவர் லண்டனில் பிஎஸ்எம்எஸ் படித்துள்ளார்.

இவருக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் செயல்படும் ஐ.நா. அலுவலகத்தில் கணினி தொடர்பான குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் சேர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் முதல் இந்து கோயிலைக் கட்டிய கானாடுகாத்தான் அழகப்பா அழகப்பன் ஐ.நா. சபையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதல் நகரத்தார். அவரைத் தொடர்ந்து ராமலட்சுமிக்கு ஐ.நா. சபையில் பணி கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்