அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்த அதிமுக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராம.அருணகிரி, சுப்புராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்தவரை நியமித்திருக்க வேண்டும். துணைவேந்தராக நியமிப்பதற்கு தமிழகத்தில் கல்வியாளர்களே இல்லையா?.
7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டால் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் அதிக அளவு இடம் கிடைத்துள்ளது. இதற்காக அதிமுக அரசுக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago