தமிழக அரசின் சார்பில், ‘தமிழ்ச் செம்மல்’ விருது கோபி பேராசிரியர் எண்ணமங்கலம் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்கள் மாவட்டம் தோறும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த பேராசிரியர் எண்ணமங்கலம் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இவர், சத்தியமங்கலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். கோபி தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் திருக்குறள் பேரவை போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.
சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி, இவ்விருதினை அவருக்கு வழங்கினார். ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற எண்ணமங்கலம் பழனிசாமிக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago