மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கோ.அன்பரசன், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமநாத துளசி அய்யா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago