தூய்மை அருணை சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா திரு வண்ணாமலை தேனிமலையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள்அமைச்சரும், தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாள ருமான எ.வ.வேலு தலைமை வகித்தார். 10 ஆயிரம் மரக்கன்று கள் நடும் திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலரான நடிகர் விவேக் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “இன்று எனது பிறந்தநாள். திரைப் பட நண்பர்களுடன் கொண்டாடி இருக்கலாம். ஆனால், தி.மலை யில் மரம் நடுவது என்பது சிறப்பானது என்பதால், மரக்கன்று களை நட்டுள்ளேன். எங்கள் அமைப்பின் மூலம் 33,33,300 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். கந்தக மலையான இங்கு, மரங்கள் நடப்பட்டு பசுமையாக உள்ளது. நாம் நடும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு ஆக்ஸிஜன் சிலிண்டராகும். நாம் உயிர் வாழ, நமக்கு ஆக்ஸிஜன் தேவை. ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும்.
கரோனா தொற்றை தடுக்க ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்து மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்.
சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, ஆவிபிடிக்க வேண்டும். உப்பு தண்ணீரில் வாயினை கொப்பளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், எந்த தொற்றும் உங்களை நெருங்காது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago