திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை விரைவில் தொடங்குவதாக ஆலை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து. 13 நாட் கள் நடைபெற்று வந்த உள்ளி ருப்புப் போராட்டம் நேற்று மாலை 6 மணியளவில் முடிவுக்கு வந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப் பட்டியில் ‘திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை’ இயங்கி வரு கிறது. இங்கு, 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டில் கரும்பு அரவையை தொடங்க வாய்ப்பில்லை என ஆலை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் உள்ளிருப்புப் போராட்டத்தில் 230-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, வீட்டுக்கும் செல்லாமல் தீபாவளி பண்டிகையையும் புறக்கணித்து ஆலை வளாகத்தில் கடந்த 12 நாட் களாக உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 13-வது நாள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழுத் தலைவர் ராஜேந் திரன் தலைமையில், தொழிற்சங்க கூட்டுக்குழுத் தலைவர் அன்பழகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று பிற்பகல் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நடப்பாண் டுக்கான கரும்பு அரவையை தொடங்குவதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது. அதேநேரத்தில், நிலுவையில் உள்ள சம்பளப் பணத்தை உடனடியாக வழங்க முடியாது என்றும், அதற்கான அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என தெரிவித்தது. இந்த சுமூக முடிவுஏற்பட்டதை தொடர்ந்து, 13 நாட் களாக நடைபெற்று வந்த உள்ளி ருப்புப் போராட்டம் நேற்று மாலை 6 மணியளவில் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘பேச்சுவார்த்தையில் சர்க்கரை ஆலையை இயக்குவதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டதின் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். ஒருவேளை ஆலை இயங்க வில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago