இங்கிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் மத்திய அமைச்சருக்கு ஏ.இ.பி.சி. கடிதம்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்துடன் வரியில்லாவர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்னதாக, ஒரு ஒப்பந்தம் செய்யக்கோரி வர்த்தக அமைச்சருக்கு ஏ.இ.பி.சி தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நேற்று அனுப்பிய கடிதம்:

இங்கிலாந்து சந்தையில்இந்திய ஆடைகள் எதிர்கொள்ளும் கட்டணக் குறைபாட்டை நீக்க வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கு முந்தைய முன்னுரிமைவர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களை இந்தியா மெதுவாக இழந்து வருகிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஆடைகளுக்கான ஆரம்ப வர்த்தக உடன்படிக்கைக்கான விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் ஐக்கியஅரபு எமிரேட்ஸுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் இங்கிலாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதிக்கு எதிராக 9.6 சதவீதம் அளவுக்கு கட்டண குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் இப்போது நமக்கு சமமாக போட்டித்தன்மையுடன் உள்ளது.

2009-18-ம் ஆண்டுகளில் பங்களாதேஷின் ஏற்றுமதி 11.7சதவீதம் உயர்ந்துள்ளது. நமது ஏற்றுமதி 0.5 சதவீதம் தேக்கமடைந்தது. பங்களாதேஷ் 40.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

2019-ம் ஆண்டில் 16.5 பில்லியன் டாலர் நாம்ஏற்றுமதி செய்தோம். ஆகவே,வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கு முந்தைய முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாமேற்கொள்ளவேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்