திருப்பூரில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்த போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்ய அழைப்பு

திருப்பூர் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டம், திருப்பூர் பூங்கா சாலையில்உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் சேகர், ஜெகநாதன் (ஏஐடியுசி), அன்பு, பாலன் (சிஐடியு), ரங்கசாமி, ரத்தினசாமி (எல்பிஎப்), ஈஸ்வரன் (ஐஎன்டியுசி), முத்துசாமி, கவுதம் (ஹெச்எம்எஸ்), மனோகர், சம்பத்(எம்எல்எப்) ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மத்திய தொழிற் சங்கங்கள், விவசாயிகள் ஒருங் கிணைப்புக்குழு அறிவிப்பின்படி, வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்ட திருத்தம், மின்சார சட்டத் திருத்தம், பொதுத் துறை தனியார் மயமாக்கல்உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் ஆகியவற்றை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது.

இதுகுறித்து 120 இடங்களில்தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் சாலை மறியல் நடத்துவது,வேலை நிறுத்தம் குறித்துஅனைத்து பனியன் உரிமையாளர்சங்கங்களுக்கும் அறிவிப்பு வழங்குவது, அனைவரையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்ய அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்