திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சி யர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் வட்டத்துக்குட்பட்ட மூணாறு தலைப்புப் பகுதியில், நீர்வரத்து மற்றும் நீர் பகிர்ந்தளிப்பு குறித்து ஆட்சியர் வே.சாந்தா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள சாக்குகள், மணல் மற்றும் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அவற்றின் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் வே.சாந்தா கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையின் போது, திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு தேவையான மோட்டார் பம்புகள், சாலைகளில் சாயும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு தேவையான மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் தேவையான மணல் நிரம்பிய சாக்கு மூட்டைகள் போன்றவை, அந்தந்த பகுதிகளில் தயார்நிலையில் இருப்பு வைக்கப் பட்டுள்ளன.
மேலும், வடிகால் பகுதிகளில் அமைந்துள்ள சிறு பாலங்களில் அடைப்புகள் ஏதுமின்றி, தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளும் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இந்த ஆய்வின்போது, கோட் டாட்சியர் புண்ணியகோட்டி, ஒன்றியக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், உதவி செயற் பொறியாளர்கள் கனகரத்தினம், தியாகேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago