காட்பாடியில் உள்ள உழவர் சந்தையை இரண்டாக பிரிக்கக் கோரி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘‘காட்பாடி அரசினர் பெண் கள் மேல்நிலைப் பள்ளி அருகே உழவர் சந்தை இயங்கி வருகிறது. கரோனா ஊரடங்கால் காட்பாடி டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் உழவர் சந்தை மாற்றப்பட்டது. இதனால்,காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந் தனர். தற்போது, பழைய இடத்துக்கே உழவர் சந்தையை மாற்றியதால் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, உழவர் சந்தையை இரண்டாகப் பிரித்து பாதி உழவர் சந்தை கடைகளை காந்திநகர் கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமான 12 ஆயிரம் சதுரடி காலியாக உள்ள இடத்துக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago