குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்

திருப்பூர் மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்டது ஜே.ஜே.நகர். இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், நேற்று காலை வரையிலும் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் மழைநீர் தொடர்ந்து தேங்கி வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கிவிட்டது. ஜேஜே நகர் பகுதியில் இருந்து காசிபாளையம், நல்லூர் பகுதிகளுக்கு சென்றுவர ஒரு சாலை மட்டுமே உள்ளது. ஏற்கெனவே, எங்கள் பகுதியிலுள்ள சபரி ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை நீர் வெளியேற வழி இல்லை. அதேபோல் மழை, ஓடை மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் கழிவறை பகுதியில் தண்ணீர் தேங்கியதால், இயற்கை உபாதைக்குகூட செல்ல முடியவில்லை. இதுதொடர்பாக பல முறை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்