கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர் மழையினால் இதுவரையில் 43 குளங்கள் நிரம்பியுள்ளன.
தற்போது பெய்து வரும் மழையினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 குளங்கள்,கடலூர் மாவட்டத்தில் 21 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 159 குளங்களும், கடலூரில் 44 குளங்களும் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் அளவினை பெற்றுள்ளன.
கோமுகி அணையின் 46 அடியில் தற்போது 44 அடிக்கு தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 594 கனஅடி நீர்வரத்து உள்ளநிலையில் 407 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மணிமுக்தா அணையின் 36 அடியில் தற்போது 21.90 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 158 கனஅடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில் வெளியேற்றம் இல்லை. திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் 29.78 அடியில் தற்போது 11.90 அடி தண்ணீர் உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதியில் வசித்த 8 குடும்பங்கள் கோண்டூர் தொடக்கப் பள்ளியில் நேற்று தங்க வைக்கப்பட்டனர். வருவாய்த்துறையினர் உணவு வழங்கி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய மழையளவு (மில்லி மீட்டரில்) வானமாதேவி 76, தொழுதூர் 55, கடலூர் 47, பண்ருட்டி 44, புவனகிரி 43, வேப்பூர் 39, சிதம்பரம் 30.8, லால்பேட்டை, விருத்தாசலம் தலா 27, காட்டுமன்னார்கோவிலில் 23.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago