தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட இலவசத் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வரும் 23-ம் தேதி கண்காணிப்பு கேமரா சர்வீஸ் மற்றும் நிறுவுதல் குறித்த பயிற்சி தொடங்க உள்ளது. 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியுடன் காலை, மாலை உணவும் இலவசம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், வங்கிக்கடன் ஆலோசனை வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் நேரிலோ, 94427 58363 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை நிலைய இயக்குநர் தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago