‘கற்போம் எழுதுவோம்’ திட்ட பயிற்சியை ஒத்திவைக்க தன்னார்வர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தொடர் மழையால் பயிற்சி வகுப்பை ஒத்தி வைக்க வேண்டுமென ‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்ட, எழுத, படிக்க தெரியாதோருக்கு 'கற்போம் எழுதுவோம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் எழுத்தறிவற்றவர் களைக் கண்டறிந்து, அவர்களுக்கு கற்பிக்கும் வகையில் 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஊதியம் அறிவிக்கப்படவில்லை.

இந்தத் திட்டத்துக்காக அந்தந்தப் பகுதி பள்ளிகளில் மையங்கள் அமைத்து அங்கு வேலை நாட்களில் தினமும் 2 மணி நேரம் பாடம் கற்பிக்கப்பட உள்ளது. கற்போர் வரவில்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று கற்பிக்க உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நவ.23-ல் கற்பித்தல் வகுப்பு தொடங்க உள்ளதால் தன்னார்வலர்களுக்கு அந்தந்த வட்டார வள மையங்களில் இன்று பயிற்சி நடக்கிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், பயிற்சி வகுப்பை ஒத்திவைக்க வேண்டுமென ‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தன்னார்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர். மேலும் கற்பிக்கும் தங்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்