குடிமராமத்துப் பணிகளால் கண்மாய்களில் தேங்கிய மழைநீர் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளால் தூர்வாரப்பட்ட கண்மாய்களில் மழைநீர் தேங்கி விவசாயத்துக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

முதுகுளத்தூர் ஒன்றியத் தலைவர் ஆர். தர்மர் புளியங்குடி கிராம கண்மாய் மராமத்து பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வறட்சியால் பருவமழையின்றி வாழக்கூடிய விவசாயிகளுக்காக மழைநீரைச் சேமித்து பயன்படுத்தும் வகையில், குடிமராமத்துப் பணி என்ற திட்டம் மூலம் கண்மாய்களைத் தூர்வாரி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர் உப கோட்டத்தில் நடப்பாண்டில் ரூ.38.79 கோடி மதிப்பீட்டில் 61 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் நடந்துள்ளன. முதுகுளத் தூர் வட்டத்தில் புளியங்குடி கிராமக் கண்மாய் ரூ. 80.8 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டு, தடுப்பணைகள் மற்றும் மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் மழையால் கிராம கண்மாய்களில் மழைநீர் தேங்கத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்