அம்மாபேட்டை அருகே சாலையை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உக்கடை கடைத்தெருவில் இருந்து சேர்மாநல்லூர் செல்லும் சாலை கடந்த சிலஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலைகளின் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதையடுத்து இந்தச் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உக்கடை கடைத் தெரு சாலையில் நேற்று நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி, கிளைச் செயலாளர் கே.லட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago