உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருநெல்வேலி, கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம்முன் கொட்டும் மழையில் நடந்தஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின்நகரத் தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார்.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், செயலாளர் குமாரசாமி தலைமை வகித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago