வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நளினிக்கு நேற்று உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனி சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளாக அடைக் கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நளினியின் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்து அவர் மீண்டும் பெண்கள் தனி சிறையில் அடைக் கப்பட்டார்.
இந்நிலையில், நளினி தனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள் வதற்காக 3 மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை அதிகாரிகள் மூலம் கோரிக்கை மனுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து, நளினியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய உள்துறை செயலகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று காலை 9.30 மணியளவில் வேலூர் பெண்கள் தனி சிறையில் இருந்து நளினியை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறைத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. நளினிக்கு அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பரி சோதனை நடைபெற்றதால், மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு மீண்டும் பெண் கள் தனி சிறைக்கு நளினி பாதுகாப்புடன் அழைத்து செல்லப் பட்டார். நளினி உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை உள்துறை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் தெரி வித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago