பெற்றோர் கவனிப்பு இல்லாமல் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்க வேண்டாம் என வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பிக்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில், "நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச் சியை பொதுமக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்கு பயன்படுத்திக் கொள் கின்றனர். ஆனால், சிலர் அதன் மீதுள்ள அதிக ஆசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளரச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தால் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவு பல்வேறு தற்கொலைகளை தூண்டுவதாக அமைகிறது.
பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கில் செல்போன்களை கொடுத்து விடுகின்றனர். குழந்தைகள் செல்போன்களை எவ்வாறு பயன்படுத்து கிறார்கள் என கவனிப்பது கிடை யாது. ஆன்லைன் வகுப்புக்காக குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்தினாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
தமிழக காவல் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை பெற்றோர்களும் விளையாட வேண்டாம்.
உங்கள் குழந்தை களையும் விளையாட அனுமதிக்காதீர். குறிப்பாக, இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி யுள்ளனர். அவர்கள் முதலில் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிட வேண்டுமென மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள் கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago