திருப்பூர் மாவட்டத்தில் 332 மி.மீ. மழை பதிவு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால், காங்கயம், பொங்கலூர், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.):

திருப்பூர் வடக்கு - 10, திருப்பூர் தெற்கு - 4, ஆட்சியர் அலுவலகம் - 8, அவிநாசி - 7, பல்லடம் - 14.50, ஊத்துக்குளி - 2, காங்கயம் - 10, தாராபுரம் - 38, மூலனூர் - 18, குண்டடம் - 20, திருமூர்த்தி அணை - 38, அமராவதி அணை - 14, உடுமலை - 38, மடத்துக்குளம் - 30, வெள்ளகோவில் வருவாய் துறை அலுவலகம் - 40, திருமூர்த்தி அணை (ஐ.பி.) - 41.20 என, 332.70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவு 20.79 மி.மீ. அதிகபட்சமாக வெள்ளகோவிலில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.

கோவை

கோவையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதேபோல, நேற்றும் மதியம் முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கோவை விமானநிலையம் 3.3, மேட்டுப்பாளையம் 2 , சின்னக்கல்லாறு 4, வால்பாறை தாலுகா 3, வால்பாறை பி.ஏ.பி. 4, சோலையாறு 7, ஆழியாறு 25.6, சூலூர் 6, பொள்ளாச்சி 6, கோவை தெற்கு 8, தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகம் 2.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்