தாழங்குடா மீனவர்களிடம் படகு, வலைகள் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

கடலூர் அருகே தாழங்குடா கடற்கரை கிராமத்தில், சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து வலைகள், படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து அக்கிரா மத்திற்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இருதரப்பினரிடையே அமைதிபேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இக்கூட்டத்தில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால், அனைவரின் படகுகளையும்,வலைகளையும், உரிய விசாரணை நடத்தி ஒப்படைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடலூர் புது நகர் இன்ஸ்பெக்டர்உதயகுமார் தலைமையிலான போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று தாழங்குடா கிராமத்தில் 100 நாட்களுக்கு பிறகு 117 மீனவர்களிடம் வலைகள், படகுகளை ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்