புதுச்சேரி லாஸ்பேட்டை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ஹரீஷ் (20). இன்ஜினியரிங் மாணவரான இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் குளிக்க சென்றார். கடல் அலையில் சிக்கிய அவர் இழுத்துச்செல்லப்பட்டார். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையோரம் ஹரீஷ் உடல் நேற்று கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago