கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள 10 பெண் ஊர்காவல் படையினருக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (17-ம் தேதி) கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 பெண் ஊர்காவல் படையினருக் கான இடம் காலியாக உள்ளது. வருகிற 18-ம் தேதி (நாளை) காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தகுதியுள்ள பெண்களிடமிருந்த காலியாக உள்ள 10 பெண் ஊர்காவல் படையினருக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.ஊர்காவல் படை காலியிடங் களுக்கு கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி மற்றும் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.
தொண்டுள்ளத்தோடு, சமூக சேவையாற்ற தன்னார்வத்தோடு வேலை செய்ய ஊர்காவல் படையில் சேரலாம். இதற்கு கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 20 முதல் 40 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை இன்று (17-ம் தேதி) மாலை 4 மணிக்குள் ஊர்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago