குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பக்கரை ஊராட்சி ஊராட்சிக்குட்பட்ட கருவாட்டனூர் கிராம மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் கிராமத்தில் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், சுமார் 1100 முதல் 1300 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிநீர் கிடைக்கவில்லை. இதனிடையே கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ராயக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தூர் வாசனூரில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுவும் தற்போது வறண்டுவிட்டது.

எனவே, ஊராட்சியின் தீர்மானத்தின்படி, ஊராட்சி நிதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தூர்வாசனூர் கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வழங்க தடை செய்கின்றனர். இதனால் எங்கள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றும், எங்கள் தேவைகளை கருத்தில் கொண்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்